| 245 | : | _ _ |a திருநந்திக்கரை குடைவரை - |
| 300 | : | _ _ |a குடைவரை |
| 500 | : | _ _ |a தெற்கு நோக்கிய திருநந்திகரைக் குன்றின் தெற்குச் சரிவில் அகழப்பட்டுள்ள இக்குடைவரை கிழக்கு-மேற்கு திசையமைப்பில் அமைந்துள்ளது. குகைத் தளம் தரை மட்டத்திலிருந்து 4 மீ. உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. தரையிலிருந்து குகைத்தளத்திற்குச் செல்வதற்குத் தாய்ப்பாறைச் சரிவில் பத்துப் படிக்கட்டுகள் வெட்டப்பட்டுள்ளன. இவற்றுள் இரண்டு படிக்கட்டுகள் தொல்லியல் அளவீட்டுத் துறையினரால் பிற்காலத்தில் வெட்டப்பட்டுள்ளன. குடைவரைக்கு முன்பு கிழக்கு மேற்காக 5.68 மீ. நீளமும், வடக்கு தெற்காக 64 செ.மீ. நீளமும் கொண்ட பாறைத் தரை காணப்படுகிறது, இக்குடைவரை முகப்பு, மண்டபம், முகமண்டபம், உள்மண்டபம், கருவறை ஆகிய பகுதிகளைக் கொண்டுள்ளது. இக்குடைவரையின் முகப்பு இரண்டு முழுத்தூண்களும், பக்கத்திற்கு ஒன்றாக இரண்டு அரைத்தூண்களும் (Pilasters) கொண்டு அமைந்துள்ளது. நான்கு தூண்களும் மூன்று அங்கணங்களும் (Inter‐spaces) இந்த முகப்பில் செதுக்கப்பட்டுள்ளன. கூரைச் சரிவில் கபோதம் முறையாகக் காட்டப்படவில்லை. முழுத்தூண்கள் சதுரம், கட்டு, சதுரம் என்ற அமைப்பில் செதுக்கப்பட்டுள்ளன. தூண்களின் மேலே விரிகோணப் போதிகைகள் உத்திரம் தாங்குகின்றன. அரைத்தூண்களை ஒட்டிய பாறையில் பக்கத்திற்கொன்றாக இரண்டு ஆழமில்லாத கோட்டங்கள் அகழப்பட்டுள்ளன. இக்கோட்டங்களில் வட்டெழுத்துக் கல்வெட்டுகள் பொறிக்கப்பட்டுள்ளன. முகப்பிலிருந்து மண்டபத்தின் தரை இரண்டு பிரிவுகளாகப் பிரித்து அமைக்கப்பட்டுள்ளது. தரையின் முன் பகுதி சற்று தாழ்வாகவும் பின் பகுதி 6 செ.மீ. உயர்த்தி அமைக்கப்பட்டுள்ளது. முன்பகுதியை முகமண்டபம் என்றும் பின்பகுதியை உள்மண்டபம் என்றும் அழைக்கலாம். முகமண்டபத்தின் மேற்புறச் சுவரில் விநாயகர் உருவம் செதுக்கப்பட்டுள்ளது. உள்மண்டபத்தின் வடபுறத்துச் சுவர்மீது சுதை பூசி எழுதப்பட்ட பல ஓவியங்கள் அழிந்து காணப்படுகின்றன. ஒரு ஓவியத்தில் உள்ள மனிதமுகத்தை மட்டும் தற்போது அடையாளம் காணமுடிகிறது. உள்மண்டபத்தின் மேற்குச் சுவரில், கிழக்குப் பார்த்த கருவறை அகழப்பட்டுள்ளது. சதுர வடிவில் அமைந்த கருவறையின் அளவுகள் 2.15 மீ. நீளம் x 2.15 மீ. அகலம் x 1.86 மீ. உயரம் ஆகும். கருவறைச் சுவரின் நுழைவாயிலின் நிலையமைப்பை ஒட்டி இரண்டு அரைத்தூண்கள் உள்ளன. இக்குடைவரையின் முகப்புத் தூணில் உள்ள கல்வெட்டுகளின் காலத்தைக் கணக்கில் கொண்டு இக்குடைவரையின் காலத்தை கி.பி. 8 ஆம் நூற்றாண்டு என்று ஆய்வாளர்கள் காலவரையறை செய்துள்ளார்கள். |
| 520 | : | _ _ |a திருநந்திகரை குடைவரைக் கோயிலாகும். இது நந்தியாற்றங் கரையில் அமைந்துள்ள திருநந்திக்கரை நந்தீஸ்வரர் கோவிலின் ஒரு பகுதியாகும். இக்குடைவரைக் கோவில் கன்னியாகுமரி மாவட்டம், கல்குளம் வட்டம், திருநந்திக்கரை கிராமத்தில் அமைந்துள்ளது. இக்குடைவரை இம்மாவட்டத்தில் மிகவும் தொன்மையான குடைவரைக் கோயிலாகக் கருதப்படுகிறது. கி.பி. எட்டாம் நூற்றாண்டில் வீரநந்தி என்ற சமண முனிவர் இந்தக் கோயிலில் தங்கி சமண சமயப்பணி ஆற்றியுள்ளார். முதலாம் இராஜராஜ சோழன் முட்டம் என்ற ஊரைக் கைப்பற்றி அதற்கு மும்முடி சோழ நல்லூர் என்று பெயர் மாற்றம் செய்வித்தான். கி.பி. 1003 ஆம் ஆண்டு, இம்மன்னன் இக்கோயிலில் தங்கித் தன் பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளான் என்று கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. |
| 653 | : | _ _ |a தமிழ்நாடு, கன்னியாகுமரி, திருநந்திக்கரை, குடைவரைக் கோயில், குடவரை, திருநந்திக்கரை குடைவரை, கல்குளம் வட்டம், தமிழக வரலாற்றுச் சின்னங்கள், தமிழகத் தொல்லியல் சின்னங்கள் |
| 700 | : | _ _ |a க.த.காந்திராஜன் |
| 710 | : | _ _ |a தமிழ் இணையக் கல்விக் கழகம் |
| 752 | : | _ _ |a திருநந்திக்கரை ஊர் மலை |c திருநந்திக்கரை |d கன்னியாகுமரி |f கல்குளம் |
| 906 | : | _ _ |a கி.பி.8-ஆம் நூற்றாண்டு |
| 914 | : | _ _ |a 8.3988538038992 |
| 915 | : | _ _ |a 77.297687454866 |
| 934 | : | _ _ |a திருநந்திக்கரை நந்தீஸ்வரன் கோயில், குலசேகரப்பட்டினம், கோவளம் கடற்கரை |
| 995 | : | _ _ |a TVA_MON_00080 |
| barcode | : | TVA_MON_00080 |
| book category | : | குடைவரைக் கோயில்கள் |
| cover | : |
|
| Primary File | : |